கண்ணுக்கு மை அழகு

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் கண்களுக்கு மையிட்டுக் கொண்டால் அதன் அழகே தனிதான். என்னதான் தன்னை அழகுபடுத்திக் கொண்டாலும் கண்களுக்கு மையிட்டுக் கொள்ளும் போது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமையும்.

*கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர் கண்களை நன்றாகக் கழுவி, அழக்குகளை அகற்ற வேண்டும். இதனால் மை இடுவது சீராக அமையும்.

*மையிட்டுக் கொள்வதற்கு ஒரே பாணியை மட்டுமே கையாள்வதை விட்டு, முகத்தின் தோற்றம், கண்களின் அமைப்பு, உடல் நிறம் ஆகியவற்றை மனதில் கொண்டு மையிட வேண்டும். உடுக்கும் ஆடைகளுக்கு ஏற்றபடியும் மையின் நிறங்கள் மற்றும் அமைப்பை மாற்றிக்கொள்ளலாம்.

*மையிட மெல்லிய பிரஷ்களையே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இமைகளில் மை தீட்ட பிரஷ்களைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

*கண் புருவங்களுக்கு மை பென்ஸில்களை பயன்படுத்தலாம். பார்க்க திருத்தமாக இருக்கும்.

*கண்கள் மிக அகன்று இருந்து, அவை சற்று குறுகலாக அல்லது நீளவாட்டில் காட்சி தரவேண்டும் என விரும்பினால் கண்களின் முளைப்பகுதியில் மைக் கோடுகளை இணைத்து, பிறகு காதுகள் புறமாக கோடுகளைச் சிறிது நீட்ட வேண்டும். அழகாக இருக்கும்.

*மூக்கு சற்று நீளமான பெண்கள் கண்களின் அடிபாகத்தில் மையை சற்றுத் தடிப்பாகத் தீட்டி, காது பக்கமாகச் சற்று நீட்ட வேண்டும்.

*முதலில் கண் புருவங்களுக்கு மை தீட்டக்கூடாது. கண் இமைகளுக்கு மையிட்ட பிறகே புருவங்களுக்குத் தீட்ட வேண்டும்.

*கண்களிலும், இமைகளிலும் மை தீட்டும் போது ஏற்படும் குறைபாடுகளை புருவங்களுக்குத் தீட்டும் போது சமப்படுத்திவிடலாம்.

கண்களுக்கு அழகாக மையிடுவோம்…கவர்ச்சியாக காட்சி அளிப்போம்.

– அ.திவ்யா, காஞ்சிபுரம்.

The post கண்ணுக்கு மை அழகு appeared first on Dinakaran.

Related Stories: