வனப்பகுதி தொட்டிகளில் டிராக்டர்களில் தண்ணீர் நிரப்பல்: குட்டிகளுடன் வந்து தாகம் தணிக்கும் யானைக்கூட்டங்கள்

கூடலூர்: முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்பி யானைகளின் தாகம் தீர்த்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும் இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், சிறுத்தைகள் மான்கள் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வந்து வாழ்ந்து வருகின்றன.

தற்போது அங்கு கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு யானைகள் பரிதவித்து வருகின்றன. எனவே வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் டிராக்டர்கள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். அந்த தொட்டிகளுக்கு குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் தண்ணீர் அருந்தி தாகம் தனித்து கொள்கின்றன.

The post வனப்பகுதி தொட்டிகளில் டிராக்டர்களில் தண்ணீர் நிரப்பல்: குட்டிகளுடன் வந்து தாகம் தணிக்கும் யானைக்கூட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: