கரூர் பள்ளி ஆசிரியைக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

 

கரூர், மார்ச்9:தமிழக அரசு கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளிக் கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடு, இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசுஅறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இதன் அடிப்படையில் நரிகட்டியூர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலலிதாவை பாராட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் மற்றும் கேடயம், 10 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா விருது பெறும் இப்பள்ளி ஆசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

The post கரூர் பள்ளி ஆசிரியைக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது appeared first on Dinakaran.

Related Stories: