மோடியை சித்தரித்து வைத்த பேனரால் பரபரப்பு

 

கோவை, மார்ச் 6: கோவை கணபதி மாநகர் பகுதியில் பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாஜவினர் 50க்கும் மேற்பட்டோர் காந்தி மாநகர் பகுதியில் கூடினர். பேனரை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் பேனரை அகற்றினர்.

பின்னர் பாஜவினரிடம் கலைந்து செல்ல வேண்டும் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் அங்கு 100க்கும் மேற்பட்ட பாஜ கட்சியினர் கூடிவிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த பாஜ கட்சியினர் அனைவரையும் ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் பேசி பின்பு அனைவரையும் விடுவித்தனர்.

The post மோடியை சித்தரித்து வைத்த பேனரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.