கிரைண்டர் பராமரிப்பு

நன்றி குங்குமம் தோழி

கிரைண்டர் பராமரிப்பு

ஆட்டக்கல்லின் இயந்திர வடிவம் தான் கிரைண்டர். இதில் தற்போது பல வகை மார்க்கெட்டில் கிடைக்கிறது. எளிதாகவும் அதே சமயம் சீக்கிரம் அரைக்கக்கூடிய இந்த கிரைண்டரை பராமரிக்கும் முறையினை தெரிந்து கொள்ளலாம்…

*வெட் கிரைண்டரில் உலர்ந்தப் பொருட் களை அரைக்கக் கூடாது. அப்படி செய்தால் கல் தேய்ந்து விடும்.

*அரைத்த பின் நன்றாகக் கழுவி ஈரம் போகத் துடைத்து வைக்க வேண்டும். சுத்தமான துணியைக் கொண்டோ அல்லது மூடியைக் கொண்டோ மூடி வைக்க வேண்டும்.

*கிரைண்டரை அழுக்குத் துணி போடுகிற கூடையாகவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை போடுமிடமாகவோ பயன்படுத்தக் கூடாது.

*சுத்தமாக மாவு போக கழுவாவிட்டால் கரப்பான் பூச்சிகள் சேரும்.

*கிரைண்டர் ஓடும்போது கீழே எக்காரணம் கொண்டும் கையை உள்ளே கொண்டு போகக் கூடாது.

*குழவியின் கைப்பிடியில் தண்ணீர் படாமல் வைத்திருப்பது நல்லது. இல்லை என்றால் கைப்பிடி தனியே வந்துவிடும்.

*கிரைண்டருக்குச் செல்லும் ஒயரில் எலி ஏதாவது கடித்திருக்கிறதா என்று அடிக்கடி செக் பண்ணிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*மாவு அரைக்கும்போது போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இல்லைஎன்றால் மாவு கட்டியாகி ‘காயில்’ பாதிப்பு ஏற்படும்.

*கிரைண்டரை தரையில் வைக்கக்கூடாது. ஸ்டாண்டின் மீதுதான் வைக்க வேண்டும். மாவு எடுக்க சுலபமாயிருக்கும். அதிகம் குனியத்தேவையில்லை. எளிதில் துடைக்கலாம்.

*மாவு தள்ளும் கைப்பலகையைச் சரியாக மாட்ட வேண்டும். அது லூஸாக இருந்தால் மாவு அரைய லேட்டாகும்.

*மாவு தள்ளும் பலகையையும், குழவியை நிறுத்தும் ஸ்டாண்டையும் ஈரம் படாமல் துடைத்து வைக்க வேண்டும்.

*குழவியைச் செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாட்டில் போட்டுக் கழுவினால் பேரிங் பழுதாகி விடும். கைப்பிடி தனியே வந்து விடும்.

*மாவு அரைக்க ஆரம்பிக்கும் முன்பு, குழவிக்கல் செயினில் பொருத்தப்பட்டு அதற்கான கொக்கியில் நல்ல விதமாக மாட்டப்பட்டுள்ளதா என்று கவனிக்கவும்.

*கிரைண்டரில் அரிசி, பருப்பை மொத்தமாக கொட்டாமல் ஓட ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக கொட்டுவது நல்லது.

*அவ்வப்போது மெஷினில் உள்ள ஸ்குரூ, போல்டுகளை சரிபார்த்து ஓட்ட செய்ய வேண்டும்.

*மெஷின் மீதும், உள்ளே மோட்டார் மீதும் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இரண்டு வருடத்துக்கு ஒருமுறையாவது கிரைண்டரை சுற்றவைக்கும் ஃபேன் பெல்ட்டை மாற்றுவது நல்லது.

தொகுப்பு: டி.லதா, நீலகிரி.

The post கிரைண்டர் பராமரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: