கழுத்து நரம்பு புடைக்க சேருக்கு பேசுறீயப்பா…அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனுார் பகத்சிங் திடலில் நேற்று முன்தினம் இரவு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற தலைப்பில் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு 50 ஆயிரம் பேர் திரண்டு வருவார்கள் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு பந்தலில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் சேர்கள் போடப்பட்டிருந்தது. ஆனால் கையால் எண்ண கூடிய அளவுக்கே கூட்டம் வந்திருந்தது.

இதனால், முக்கால்வாசிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாகவே கிடந்தது. மேடைக்கு முன்னதாக சில வரிசைகளில் நெருக்கமாக கட்சியினர் அமர வைக்கப்பட்டு கூட்ட நெருக்கடி காட்ட எடுத்திருந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. மாநாட்டில் வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வங்கி கொண்ட ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் நிறுவனர் தேவநாதன், புதிய நீதி கட்சி சண்முகம், காமராஜர் மக்கள் கட்சியின் தமிழருவி மணியன் உள்ளிட்ட அடிபொடி கட்சிகளுடன், கூட்டணி அமைத்திருக்கும் 3% மட்டுமே வாக்கு வங்கி கொண்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரிவேந்தர் பேசத்துவங்கியதுமே, திரைப்படங்களில் படங்களில் பாடல் காட்சி வந்ததும் ‘தம்’மடிக்க வெளியே செல்லும் ரசிர்கர் கூட்டம் போன்று கட்சியின் தொண்டர் கூட்டம் கலையத்துவங்கியது. பாஜ தலைவர் பேசத் துவங்கியதும் ‘தம்’மடிக்க சென்ற கூட்டம் அப்படியே வீட்டுக்கு புறப்படுவதை போன்று ‘டிபன்’ கடைகளை நோக்கி விறுவிறுவென கூட்டம் நகர்ந்தது. தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய கொண்டே இருக்க அண்ணாமலை மட்டும், ‘மாற்றத்திற்கான மாநாடு குறித்து கழுத்து நரம்பு புடைக்க பேசிக்கொண்டிருந்தார்.

தமிழ்நாடு அரசு குறித்த பேசத்துவங்கியதும் கொட்டாவி விட்டுக்கொண்டே, வயிற்றை தடவிக்கொண்டு ஒரேயடியாக, சாலையில் இருக்கும் டிபன் கடைகளில் தொண்டர்கள் குவிந்தனர். மேடைக்கு முன்னர் ஆட்கள் இன்றி காலி நாற்காலிகளை பார்த்து அண்ணாமலை மூச்சு முட்ட பேசிக்கொண்டிருந்தனர். மேடையில் அமர்ந்திருந்த மற்ற கட்சித்தலைவர்கள் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் நெலிந்து கொண்டிருந்தனர். கட்சி நிறுவனர் பாரிவேந்தரோ என்ன சொல்வது எனத்தெரியாமல் விழிக்க கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பக்கத்தில் இருக்கும் சொந்த மாவட்டமான பெரம்பலுாரில் இருந்துகூட கூட்டம் வராத நிலையில் மாநாடு மொத்தமாக சொதப்பிக்கொண்டது. சிறுகனூரில் நடைபெற்ற மாநாடு குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் சிலர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை காலி நாற்காலிகளிடம் உரையாற்றுவதாகவும், வடிவேல் காமெடியில் வரும் கரிகாலன் மேஜிக் ஷோ வசனத்தை பயன்படுத்தி வீடியோ பதிவிட்டு, கமண்ட் செய்து வருவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைகண்டு பாரிவேந்தர் அதிர்ச்சி அடைந்தார்.

The post கழுத்து நரம்பு புடைக்க சேருக்கு பேசுறீயப்பா…அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள் appeared first on Dinakaran.

Related Stories: