நேரடியாக இனி வழங்கப்படாது விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்று

சென்னை: கிண்டியில் ரூ.41.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய போக்குவரத்து ஆணையரகம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுமட்டுமல்லாது, பதிவுச்சான்று மற்றும் ஒட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் புதிய சேவை முறையையும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து ஒப்பளிக்கப்படும் பதிவுச் சான்று மற்றும் ஒட்டுநர் உரிமம் ஆகியவை இனி விரைவு அஞ்சல் மூலமாகவே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த புதிய சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன அவை பின்வருமாறு:
* 28.2.2024 முதல் அனைத்து ஒட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றுகள் இனி விரைவு அஞ்சல் முலமே அனுப்பிவைக்கப்படும். நேரடியாக வழங்கப்படமாட்டாது.
*கன் மற்றும் சாரதி ஆப்-களில் கைப்பேசி எண் மற்றும் முகவரி ஆகிய இரண்டும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய நேர்வுகளில் பதிவுச்சான்றுகளும், ஒட்டுநர் உரிமங்களும் விரைவு அஞ்சல் மூலம் டெலிவரி செய்யப்படமாட்டாது. அத்தைகைய தபால்கள் மீண்டும் RTO வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலங்களுக்கு தபால் துறையால் டெலிவரி செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுவிடும்.
கட்டணம் செலுத்தி அவ்விரு விவரங்களும் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நேர்வுகளில் விண்ணப்பதாரர் ஆர்டிஒ மற்றும் பகுதி அலுவலகத்தை அனுகினாலும் அவருக்கு உரிய சான்று நேரடியாக வழங்கப்படமாட்டாது.
* விண்ணப்பதாரர் வெளியூர் சென்று இருந்தாலோ அல்லது வீடு பூட்டப் பட்டிருந்தாலோ அவரது ஒட்டுநர் உரிமம் அல்லது பதிவுச்சான்று தபால் துறை மூலம் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்ட நேர்வுகளில் தொடர்புடைய விண்ணப்பதாரர் அலுவலகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவரிடம் மேற்படி சான்றுகள் நேரடியாக ஒப்படைக்கபடமாட்டாது. மாறாக, அத்தகைய விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை பெற்றுக்கொண்டு அதன் மூலமாகவே அனுப்பிவைக்கப்படும்.
* தவறான முகவரியோ அல்லது செல்போன் எண்ணையோ விண்ணப்பதாரர் மென்பொருளிள் பதிவேற்றம் செய்து இருந்தால் அதற்கு விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும்.

* எனவே பொதுமக்கள் இந்த சேவையினைப் பெறுவதற்கு தங்களது உண்மையான முகவரியையும் தங்களின் செல்போன் எண்ணை மட்டுமே தங்களது ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று விண்ணப்பங்களில் தெளிவாக குறிப்பிடவேண்டும். மாறாக, இடைத்தரகர்கள் மற்றும் ஒட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் முகவரியையோ செல்போன் எண்ணையோ குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு உரிய ஒட்டுநர் உரிமம் மற்றும் தகுதிச்சான்று தற்காலிக முடக்கம் செய்யப்படும். அத்தைகைய விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி மீண்டும் வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் தங்களது சரியான முகவரியைவும் செல்போன் எண்ணையும் உள்ளீடு செய்து மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பின்னரே அது ஒப்புதல் அளிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஒட்டுத்த உரிமம் மற்றும் தகுதிச்சான்று விரைவு அஞ்சல் முலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த சேவை மூலமாக வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்களில் பொதுமக்கள் நேரடியாக வருவது கணிசமாகக் குறையும்.

The post நேரடியாக இனி வழங்கப்படாது விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்று appeared first on Dinakaran.

Related Stories: