மாமல்லபுரத்தில் முதலாம் நரசிம்ம வர்மன் ஜெயந்தி விழா: மாலை அணிவித்து மரியாதை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் முதலாம் நரசிம்ம வர்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்லவ மன்னர்களில் முதலாம் நரசிம்ம வர்மன் புகழ் பெற்றவர் ஆவார். இவர், தலைசிறந்த மல்யுத்த வீரர்களை வென்றதால் ”மாமல்லன்” என்ற சிறப்பு பெயர் பெற்றார். இவர், மாசி மாதத்தில் பிறந்தவர் ஆவார். முதலாம் நரசிம்ம வர்மனை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இவருக்கு ஜெயந்தி விழா குழுவின் சார்பில் ஜெயந்தி பெருவிழா, முக்கிய கோயில்களில் அபிஷேக ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வன்னிய குல சத்ரிய பண்பாட்டு ஒற்றுமை இயக்கம் சார்பில் 48வது ஆண்டாக முதலாம் நரசிம்ம பல்லவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாமல்லபுரம் பழைய சிற்ப கலைக் கல்லூரி வளாகம் மற்றும் இசிஆர் நுழைவாயில் பகுதி என 2 இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, அகில பாரத சத்ரிய மகாசபா பொதுச் செயலாளர் பாலகுமரன் தலைமை தாங்கினார்.

வன்னியர் குல சத்ரிய பண்பாட்டு ஒற்றுமை இயக்க பொதுச் செயலாளர் லிங்க மூர்த்தி, மாநில செயலாளர் கணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், அகில பாரத சத்ரிய மகாசபா தலைவர் குணா ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் நரசிம்ம வர்ம பல்லவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திருவள்ளூர் மாவட்ட தலைவர் குமார், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாஸ்கர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் சத்தீஸ், தெற்கு மாவட்ட தலைவர் மோகன்தாஸ், வடக்கு மாவட்ட பொருளாளர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் முதலாம் நரசிம்ம வர்மன் ஜெயந்தி விழா: மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: