கிரிமினல் புகார் குறித்த வழக்கு ரத்து கோரிய ராகுல் மனு தள்ளுபடி: ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவு

ராஞ்சி: கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட்டின் சாய்பாசா நகரில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ‘கொலைகாரன்’ என விமர்சித்தார். இதுகுறித்து பாஜ தலைவர் நவீன் ஜா ராஞ்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரியில், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுல் மீது எந்த கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அம்புஜ் நாத் உத்தரவிட்டுள்ளார். இதனால் ராகுல் இனி விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது.

 

The post கிரிமினல் புகார் குறித்த வழக்கு ரத்து கோரிய ராகுல் மனு தள்ளுபடி: ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: