ஓரிரு நாளில் கெஜ்ரிவாலை கைது செய்ய ஒன்றிய அரசு சதி திட்டம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சரான கோபால் ராய் கூறுகையில், ‘‘ முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ மூலமாக நோட்டீஸ் அனுப்புவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து நோட்டீசும் தோல்வியடைந்ததால் தற்போது அவர்கள் சிபிஐயை தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆம் ஆத்மி தலைவர்களுடன் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியபோதிலும் அவர்களுக்கு எதிராக ஊழல் நடந்ததற்காக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எதிர்கட்சிகள் இந்தியா அணியை உருவாக்கியதில் இருந்து பாஜ விரக்தியில் இருக்கின்றது” என்றார்.

இதேபோல் டெல்லி கேபினெட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘‘காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டவுடன் கலால் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை 7வது சம்மனை அனுப்பியது. சிபிஐ முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலமாக தகவல் கிடைத்துள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி தொகுதி பங்கீடூ நிகழ்ந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று எங்களுக்கு தகவல்கள் வந்தன. நீங்கள் விரும்பினால் கெஜ்ரிவாலை கைது செய்யுங்கள். ஆனால் கூட்டணி தொடரும்’’ என்றார்.

The post ஓரிரு நாளில் கெஜ்ரிவாலை கைது செய்ய ஒன்றிய அரசு சதி திட்டம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: