ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


ஸ்ரீநகர்: ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.ஐஐடி ஜம்மு, ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் சாலை, ரயில் இணைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார். ஜம்மு விமான நிலைய புதிய முனையக் கட்டடம், பெட்ரோலிய பொதுப்பயன்பாட்டுக் கிடங்கிற்கும் அடிக்கல் நாட்டினார். 1,500 பேருக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

The post ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: