மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிப்.15 முதல் ஏப்.2ம் தேதி வரை 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெற்றது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். சிபிஎஸ்இ இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ நடத்திய 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 38 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று மே 13ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர் சிபிஎஸ்இ இணைய தளத்தில் தங்களின் பிறந்த தேதி மற்றும் 6 இலக்க தேர்வு எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ் இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 16,22,224 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அதில் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 87.98% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 0.65% அதிகரித்துள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 91.52%, மாணவர்கள் 85.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.40% மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 99.91 சதவீதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. 99.04 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் 2-வது இடமும் 98.47 சதவித தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-வது இடம் பிடித்துள்ளதுள்ளது. 78.28 சதவீத தேர்ச்சியுடன் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ் மண்டலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் கலந்து கொண்ட 24,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனர். 1.16 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் 90 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனர்.

 

 

The post மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: