கழிவுநீர் உறை குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

ஜெயங்கொண்டம், பிப்.18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பிலிச்சிக்குழி காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு நான்கு குழந்தைகள். இவரது நான்காவது குழந்தை சர்வேஸ்வரன் இரண்டரை வயது. இக்குழந்தை நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணவில்லை. குழந்தையின் தாய் வடக்கு காலனி தெரு மினி டேங்க் அருகே தேடிப்பார்த்த போது, கழிவுநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்டிருந்த உறைகுழியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனே சிறுவனை அவரது தாயார் ஜெயலட்சுமி தூக்கி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். ஆனால் செல்லும் இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் குழந்தை இறப்பு பற்றி விசாரித்து வருகின்றனர். தற்போது இறந்த சர்வேஸ்வரன் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

The post கழிவுநீர் உறை குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: