மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

திருச்சி, அக்.14: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியீட்டுள்ளது. மாவட்ட மைய நூலகம், ரோட்டரி பீனிக்ஸ், என்.ஆர்ஐஏஸ் அகாடமி மற்றும் வாசகர் வட்டம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்யும் மாணவர்களுக்கு “வழிகாட்டுதல் நிகழ்ச்சி அக்.16 ம் தேதி மாலை 3.30 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் என்.ஆர் ஐஏஸ் அகாடமியின் இயக்குநர் விஜயாலயன் கலந்து கொண்டு மாணவர்களுடன் TNPSC தேர்வுகள் எழுதுவதற்கான கல்வித்தகுதிகள், பாடத்திட்டம், படிக்க வேண்டிய புத்தகங்கள், தயார் செய்யும் உத்திகள் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடி விளக்கமாக எடுத்துரைக்க உள்ளார். மேலும் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து நேரடியாக உரையாடி விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் II, IIA ற்கான முதன்மைத் தேர்வு குறித்தும், மாதிரித் தேர்வுகள் நடத்துவது குறித்தும் அறிவிக்கப்பட உள்ளது என மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: