வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

 

தா.பேட்டை, அக்.11: தா.பேட்டை வேளாண் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தா.பேட்டை வட்டார அட்மா தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட விவசாயிகள் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் வரகுண பாண்டியன் வரவேற்றார். அட்மா திட்டத்தில் 2024-25 ஆண்டு முதலாம் தவணைத் தொகையின் கீழ் பெறப்பட்ட நிதி நடைமுறைப்படுத்தும் விபரங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் பேரில் தீர்மானங்கள் ஒப்புதல்கள் பெறப்பட்டன. அட்மா தலைவர் பேசும்போது, தா.பேட்டை வட்டாரத்தில் அட்மா திட்டம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். அட்மா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பக்ருதீன், ரமேஷ் ஆகியோர் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.

The post வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: