லால்குடி வட்டார பகுதியில் ரூ.23 கோடியில் உயர்மட்ட மேம்பால பணி தலைமை பொறியாளர் தேவராஜ் ஆய்வு

 

லால்குடி, அக்.11: லால்குடி வட்டார பகுதியில் நெடுஞ்சாலை துறை நபார்டு சார்பில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும், உயிர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை தலைமை பொறியாளர் தேவராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் கீழ் ரூ.23 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பால பணிகள் லால்குடி மற்றும் புள்ளம்பாடி, கல்லக்குடி மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. கல்லக்குடி – மேலரசூர் – மால்வாய் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் உயர் மட்டபாலம் மற்றும் கல்லக்குடி முதுவத்தூர் சாலையில் கட்டப்பட்டு வரும் உயர் மட்டபாலம், நகர் கிராமத்தில் இருந்து மகிழம்பாடி செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள், நெடுங்கூர் கிராமத்திலிருந்து நெய் குளம் வழியாக பெருவளப்பூர் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் உயர் மட்டம் மேம்பால பணிகளையும், மண்ணச்சநல்லூர் தாலுகா தேவிமங்கலம் -மேலவங்காரம்-கீழவங்காரம் சாலையில் நடைபெற்று வரும்மேம்பால பணிகள் மற்றும் பூவாளூர் – சிறுகனூர்-திருப்பட்டூர் சாலையில் நடைபெற்று வரும் உயர் மட்ட மேம்பாலபணிகளை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமை பொறியாளர் தேவராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை அனைத்தையும் விரைவாக செய்து முடிக்க அரசு அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சரவணன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன், திருச்சி உட்கோட்ட உதவி பொறியாளர்கள் இளங்கோவன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post லால்குடி வட்டார பகுதியில் ரூ.23 கோடியில் உயர்மட்ட மேம்பால பணி தலைமை பொறியாளர் தேவராஜ் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: