நிதி ஆணைய தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 16வது நிதி ஆணைய தலைவர் அரவிந்த் பனாகரியாவை நேற்று சந்தித்து பேசினார். 16வது நிதி ஆணையத்தின் தலைவராக நிதி ஆயோக்கின் முன்னாள் துணை தலைவரான அரவிந்த் பனாகரியா கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். நிதி ஆணையம் தனது அறிக்கையை அடுத்தாண்டு சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது. இதில் அரவிந்த் பனாகரியா, உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, நிரஞ்சன் ராஜ்யத்யாக்‌ஷா, சவும்யா காந்தி கோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நிதி ஆணைய தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: