புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்காக ஏசி சிற்றுண்டி விடுதி: கமிஷனர் ரத்தோர் திறந்து வைத்தார்

சோழிங்கநல்லூர்: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான வைப்பறை மற்றும் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலை, நவீனப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதியை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.புதுபேட்டை ஆயுதப்படை வளாகத்தில் டிரைவர் சாலை வழியாக செல்லும் நுழைவாயில் சாலை மிகவும் பழுதடைந்திருந்ததால், அங்குள்ள ஆயுதப்படை பணி நியமன அலுவலகம் செல்வதற்கும், காவலர்கள் குயிடியிருப்புக்கு செல்வதற்கும் மிகவும் சிரமாக இருந்தது.

எனவே போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் 152 மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. அதேபோல், பழைய காவல் சிற்றுண்டி விடுதி சிறிய இடமாகவும், போதிய வசதியில்லாமலும் இருந்ததால், போலீஸ் கமிஷனர் உத்தவுப்படி குளிரூட்டி வசதி, புதிய மேஜை, நாற்காலிகளுடன் ஒரே நேரத்தில் 48 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் ஜெயகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்காக ஏசி சிற்றுண்டி விடுதி: கமிஷனர் ரத்தோர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: