கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் 74 பேருக்கு சிறந்த ஆசிரியர் விருது

 

கோவை, பிப்.12: கோவை மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற நேரு கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பி.கே,தாஸ் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை பாலக்காடு சாலை திருமலையாம்பாளையம் நேரு கல்லூரி பி.கே. தாஸ் நினைவு அரங்கில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில், முதன்மை விருந்தினராக பொள்ளாச்சி, விஸ்வ தீப்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், பாதிரியார் தாமஸ் தொட்டுங்கால் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக கோவை, பீளமேடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி ஜி.கே. விஜயலட்சுமி கலந்து கொண்டார். விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான வக்கீல் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார்.  தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி கிருஷ்ணகுமார் வாழ்த்தினார். செயல் இயக்குனர் (நிர்வாகம் மற்றும் கல்வியல்) எச். என். நாகராஜா பேசினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. அனிருதன் வரவேற்றார்.

விழாவில், கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சுமதி, பாலக்காடு, புனித ரத்தல் கேத்தரல் ஸ்கூல், ஆசிரியை சிவப்பிரியா, பாலக்காடு, வண்ணமடை, பகவதி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் கிருபானந்த், திருவனந்தபுரம், பிஷப் பெரைரா மெமோரியல் பள்ளி ஆசிரியை சிங்கி பால் ஜார்ஜ், காரத்தொழுவு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயசிங், ஈரோடு, பெருந்துறை,

தி ரிச்மண்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை பரமேஸ்வரி, பொள்ளாச்சி, ஹோனி பெஞ்ச் சீனியர் செகண்டரி ஸ்கூல் ஆசிரியை பவித்ரா, கோவை வெள்ளலூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை சண்முகாதேவி, நாகர்கோயில், மணாலிக்கரை, செட். மேரிஸ் கோரிட்டி ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் மேரி ஜோஷி, பாலக்காடு, அகலியா பப்ளிக் பள்ளி ஆசிரியை சுஜாதா உள்பட மொத்தம் 74 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

The post கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் 74 பேருக்கு சிறந்த ஆசிரியர் விருது appeared first on Dinakaran.

Related Stories: