புலியகுளம் சிறுவர், சிறுமியர் மன்றத்தில் கலைவிழா

 

கோவை, மே 27: கோவை புலியகுளம் சிறுவர் சிறுமியர் மன்றத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் ஐ.ஜி.ராஜேஸ்வரி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். கோவை புலியகுளம் பகுதியில் சிறுவர், சிறுமியர் மன்றம் உள்ளது. 1963ம் ஆண்டு முதல்வராக இருந்த போது காமராஜர் இந்த புலியகுளம் சிறுவர், சிறுமியர் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

இங்கு படித்த பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த சிறுவர், சிறுமியர் மன்றத்தில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைவிழா நடைபெற்றன. இதில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் ஐ.ஜி.ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

The post புலியகுளம் சிறுவர், சிறுமியர் மன்றத்தில் கலைவிழா appeared first on Dinakaran.

Related Stories: