கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்தில் மண் அரிப்பை தடுப்பதற்கு மரக்கன்றுகள் நடவு

 

சோமனூர், மே 26: கோவை மாவட்டம், கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக மழை பெய்தது. இதனால் ஊராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. குறிப்பாக குளத்துபாளையத்தில் உள்ள அம்ரித்சரோவ ர்குளம் நிரப்பி வருகிறது. தமிழக அரசின் நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தி வரும் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது பெய்த கனமழையால் குளம் நிரம்பி வருகிறது.

நிலத்தடி நீர் சேமிப்பு திட்டத்தை முன்னெடுத்து அமைக்கப்பட்ட இந்த குளத்தினால் அருகில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வரத்து கிடைக்கிறது. அதனால் நீர் நிலைகளின் ஏரியில் மண் அரிப்பை தடுக்கும் பொருட்டு ஏரி பகுதிகளில் மரம் நடும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக நேற்று ஊராட்சியில் உள்ள அம்ரித் சரோவர் குட்டையின் ஏரியில் மரம் நடும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி சந்திரசேகர் துவக்கி வைத்தார். இதையடுத்து ரூ.500 மதிப்புள்ள உயரமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

The post கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்தில் மண் அரிப்பை தடுப்பதற்கு மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Related Stories: