கோவையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு

 

கோவை, மே 28: கோவை மாவட்டம் தீ தடுப்பு குழுவினர் சார்பில் தீ விபத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து தீ விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தீ தடுப்பு குழுவினர் சார்பில் கோவை வடகோவை சிந்தாமணி அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வரும் வராண்டாரேஸ் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில், முன்னணி தீயணைப்பாளர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது, தீ விபத்து ஏற்படும்போது அதிலிருந்து எப்படி பாதுகாப்பாக தப்பிக்க வேண்டும்? என்பது குறித்தும், தீயை அணைப்பது மற்றும் பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post கோவையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: