நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மக்களவையில் பாஜ எம்பி கோரிக்கை

புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சரும் எம்பியுமான சத்யபால் சிங்,‘‘ அரசியல் சட்டத்தின் முதல் பத்தியில் இந்தியா அது பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த நாட்டின் பெயர் பாரதம். இது அறிவின் சக்தியாக திகழ்கிறது.

இது அப்படிப்பட்ட நாடு, உலகிலேயே மிக பெரியது. பாரதத்தில் பிறந்தது நம் பாக்கியம் என்று கடவுளர்கள் கூட சொன்னார்கள். எனவே நாட்டின் பெயரை பாரதம் என்று மாற்ற வேண்டும்.நாட்டில் வறுமையை ஒழிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். தீவிரவாதம் மற்றும் சாதிவெறியை ஒழிப்போம்.2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை சுயசார்பு மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் கடந்த கால பெருமையை மீட்டெடுப்போம்’’ என்றார்.

 

The post நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மக்களவையில் பாஜ எம்பி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: