பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

The post பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: