வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சமபந்தி விருந்து

ஸ்ரீபெரும்புதூர்: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில், ஸ்ரீபெரும்புத்தூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து வழங்கபட்டது. இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஒன்றிய கவுன்சிலர் கோமதி கணேஷ்பாபு, ஊராட்சி துணை தலைவர் சிவா எத்திராஜ், முன்னாள் அறங்காவலர் ஜானகிராமன், உபயதாரர் செந்தில்தேவராஜ், கோயில் ஆய்வாளர் திலகவதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 பக்தர்களுக்கு கோயில் சார்பில் பருத்தி சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.

The post வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சமபந்தி விருந்து appeared first on Dinakaran.

Related Stories: