நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் சிட்டி யூனியன் வங்கியின் வர்த்தகம் ரூ.96,743 கோடி: நிர்வாக இயக்குநர் காமகோடி தகவல்

சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிட்டி யூனியன் வங்கியின் வர்த்தகம் ரூ.96,743 கோடி, நிகர லாபம் ரூ.253 கோடி என்று வங்கியின் நிர்வாக இயக்குநர்- முதன்மை செயல் அதிகாரி காமகோடி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கயின் 2023-24ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு கணக்கு முடிவுகள் குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர்- முதன்மை செயல் அதிகாரி காமகோடி வெளியிட்ட அறிக்கை: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1519 கோடியாக உள்ளது. இதர வருமானம் ரூ.193 கோடியாக உள்ளது. மொத்த லாபம் ரூ.364 கோடியாகவும், நிகர லாபம் ரூ.253 கோடியாகவும் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.96,743 கோடி. வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே ரூ.52,726 கோடியாகவும், ரூ.44,017 கோடியாகவும் உள்ளது. மேலும் டிசம்பர் மாதத்துடன் முடிந்த ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,463 கோடியாகவும் அதில் இதரவருமானம் ரூ.566 கோடியாகவும், மொத்த லாபம் ரூ.1,165 கோடியாகவும், நிகர லாபம் ரூ.761 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 2.19 சதவீதமாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.49 சதவீதமாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த ரூ.7193 கோடியில் இருந்து ரூ.8,119 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி நேற்று வரை 772 கிளைகள் மற்றும் 1,665 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

The post நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் சிட்டி யூனியன் வங்கியின் வர்த்தகம் ரூ.96,743 கோடி: நிர்வாக இயக்குநர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: