தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு 9 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அம்ரித் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும். ரயில்வே துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22,200 கி.மீ., தொலைவுக்கு எரிசக்தி, நிலக்கரி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: