மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதல்.. 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் பகுதிக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து வடமேற்கு மெக்சிகோவில் எலோடா முனிசிபாலிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ஒரு டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் அந்த பேருந்து அங்கேயே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர்.

The post மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதல்.. 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: