மேஷம்

மேஷம் : ராசி நாதன் செவ்வாய் நீசமாக இருந்தாலும் புதன், ராகு பலமாக இருப்பதால் சாதகமான நிலை உண்டு. மனைவி வீட்டில் இருந்து பாகப் பிரிவினை மூலம் பணம், நகை வரும். அவசியத் தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். சகோதரி திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் உண்டாகும். பெண்கள் சமையலறையில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம், கவனக் குறைவு   காரணமாக  காயங்கள் ஏற்படலாம்.  உத்யோக  வகையில் அலைச்சல். பயணங்கள் இருக்கும். பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பொருள் இழப்பு வர வாய்ப்புள்ளது.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி தரிசிக்கலாம்.பக்தர்களுக்கு பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி வினியோகிக்கலாம்.

× RELATED ரிஷபம்