6 முறை பட்ஜெட் தாக்கல் மொரார்ஜியின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா

புதுடெல்லி: தொடர்ந்து 6 முறை ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமன் செய்யவிருக்கிறார். ஒன்றிய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ மீண்டும் ஆட்சி அமைத்தபோது நிர்மலா சீதாராமன் ஒன்றிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்துஅவர் நிதியமைச்சராக உள்ளார். அவர் 5 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். வருகிற 1ம் தேதி ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தொடர்ந்து 6 முறை ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார். கடந்த 1959 முதல் 1964 காலக்கட்டத்தில் நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி 5 முழு பட்ஜெட்டையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார். இதுபோன்றுதான் நிர்மலா சீதாராமனும் ஐந்து முறை முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதன் மூலம் அவர் மொரார்ஜியின் சாதனையை சமன் செய்ய உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாஜி நிதியமைச்சர்கள் அருண் ஜெட்லி,ப.சிதம்பரம்,யஷ்வந்த் சின்கா ஆகியோர் தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளனர்.

The post 6 முறை பட்ஜெட் தாக்கல் மொரார்ஜியின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா appeared first on Dinakaran.

Related Stories: