பழநிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களை வரவேற்று உபசரித்த இஸ்லாமியர்கள்

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ளது பள்ளப்பட்டி. இங்குள்ள அண்ணாநகரில் பள்ளப்பட்டி ஜமாத்துல் உலமா, ஐக்கிய நல கூட்டமைப்பு, பாப்புலர் எக்ஸ்பிரஸ் மற்றும் பள்ளி மாநகர் எக்ஸ்பிரஸ் இணைய தள நண்பர்கள் சார்பாக ஆண்டு தோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களை வரவேற்று பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். அதே போல இந்த ஆண்டும், பழநி பாதயாத்திரை பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக குத்புதீன் தர்கா வளாகம் அருகே சாமியானா பந்தல் அமைத்துக் கொடுத்தனர்.

மேலும் வாட்டர் பாட்டில், பழ சூஸ், பிஸ்கட் பாக்கெட், கால் வலிக்கான தைலம் மற்றும் செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதி செய்து கொடுத்தனர். பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் நடத்தும் இது போன்ற நிகழ்வு அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பீர்க்கலாம் அயூப், அடையார் சாகுல், மருந்து வணிகர்ர் சங்க முன்னாள் தலைவர் பாப்புலர் அபுதாஹிர், கப்ளி சேட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பழநிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களை வரவேற்று உபசரித்த இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: