அயோத்தியில் நடந்தது பிராண பிரதிஷ்டை விழா மட்டுமே!: 41 நாட்கள் கழித்து குடமுழுக்கு விழா நடைபெறும் என தகவல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்றது பிராண பிரதிஷ்டை விழாதானே தவிர குடமுழுக்கு அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கருவறையில் நிறுவப்பட்டுள்ள பல ராமர் சிலைக்கு உயிரூட்ட நிகழ்வான பிராண பிரதிஷ்டை பூஜை விமர்சியாக நடைபெற்றது. இந்த பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு குடமுழுக்கு விழா என்று பலரும் கருதி வந்தனர்.

இந்நிலையில், பிராண பிரதிஷ்டை என்பது வேறு, குடமுழுக்கு என்பது வேறு. அயோத்தியில் நேற்று நடந்தது பிராண பிரதிஷ்டை விழா மட்டுமே என்று தமிழ்நாட்டை சேர்ந்த ஆன்மிகவாதி சுனில் தாஸ் விளக்கியுள்ளார். கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தற்போது பிராண பிரதிஷ்டை மட்டுமே நடந்துள்ளது என்ற அவர், பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிந்தபின் 41 நாட்கள் கழித்து குடமுழுக்கு நடைபெறும் என்றார்.

குடமுழுக்கு விழாவை சாதுக்கள் மட்டுமே நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார். அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதால் பால ராமர் சிலை வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் சீதை, அனுமன், ஜடாயு உள்ளிட்டோருக்கு வளாகத்தில் தனித்தனி சிலைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் சுனில் தாஸ் தெரிவித்தார்.

 

The post அயோத்தியில் நடந்தது பிராண பிரதிஷ்டை விழா மட்டுமே!: 41 நாட்கள் கழித்து குடமுழுக்கு விழா நடைபெறும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: