மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் இரண்டவது பெரிய யாத்திரையான பாரத் ஜோடோ நியாய யாத்திரை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் தவ்பால் நகரின் கோங்ஜோமில் உள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேற்று பிற்பகலில் தொடங்கினார். இன்று 2வைத்து நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடைப்பயணத்தின் போது பேசிய ராகுல் காந்தி; கடந்த ஆண்டு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டோம்.

இதன் மூலம் இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நாங்கள் கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு யாத்திரை செய்ய விரும்பினோம், மணிப்பூர் மக்கள் என்னவிதமான துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் உணரும் வகையில், மணிப்பூரில் இருந்து பயணத்தை துவங்குவதே மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று முடிவு செய்தோம். மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம் இவ்வாறு கூறினார்.

The post மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: