பொங்கலுக்குப் பின் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும் : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை :பொங்கலுக்குப் பின் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் எளிதாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் நிற்கும் இடத்தை பயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படும். முதற்கட்டமாக அரசு விரைவுப் பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கலுக்கு பின் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.,”இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலராக பார்த்தீபனை நியமனம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலரான ஜெ.யார்த்தீபன், நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post பொங்கலுக்குப் பின் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும் : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: