துடிப்பான குஜராத் வர்த்தக மாநாடு உலக தலைவர்களுடன் பிரதமர் பங்கேற்பு

அகமதாபாத்: குஜராத்தில் நடக்கும் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டில் சர்வதேச தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் ‘துடிப்பான குஜராத்’ தலைப்பிலான 10வது வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன. முன்னணி உலகளாவிய நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், ‘குஜராத்தில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சர்வதேச தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ‘துடிப்பான குஜராத்’ உச்சிமாநாடானது, எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக இருக்கும். பிரதமர் மோடியின் ஒரே நிலம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற எண்ணத்தை காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று கூறினார்.

The post துடிப்பான குஜராத் வர்த்தக மாநாடு உலக தலைவர்களுடன் பிரதமர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: