திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா: அசைவ திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத அசைவ திருவிழாவில் 10,000 க்கும் மேற்பட்ட பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத அசைவ விருந்து திருவிழா நடைபெற்றது.

நேரத்தி கடனாக செலுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு 3,500 கிலோ அரிசியை கொண்டு சாதத்தை மலை போல் குவித்து முத்தையா சாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்பு 10,000 ஆண்களுக்கு இலை போட்டு கறி விருந்து பரிமாறப்பட்டது. இந்த அசைவ விருந்தில் திருமங்கலம், கரடிகல், செக்காஊரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.

The post திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா: அசைவ திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து appeared first on Dinakaran.

Related Stories: