இந்தியாவில் 3 ஆண்டுகளில் ரூ.10,319 கோடி இணையவழி மோசடி: சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தகவல்

டெல்லி: இந்தியாவில் இணையவழி குற்றங்கள் மூலம் ரூ.10,000 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமான ஐ4சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 3 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களால் ரூ.10,319 கோடி இந்திய மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இணையவழி குற்றங்களில் இருந்து ரூ.1,127 கோடி விற்கப்பட்டு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த இழப்பீல் 10% என்று ஐ4சி தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். இணையவழி நிதி மோசடிகளை விரைவாக தடுக்க வங்கிகளுக்கு உதவும் வகையில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை செய்து வருவதாக ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் 3 ஆண்டுகளில் ரூ.10,319 கோடி இணையவழி மோசடி: சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: