பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2008ல் இருந்து பி.எட். சிறப்பு கல்வி பட்டப் படிப்பை தொலைநிலை வாயிலாக வழங்கி வருகிறது. இந்த படிப்பை வழங்கி வரும் 2 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் ஒன்று. இது பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது. இவர்கள் அரசு பொது மற்றும் சிறப்பு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். அந்த வகையில், 2024ம் ஆண்டு பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 20ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://tnou.ac.in/prospectus-bed.php என்ற பல்கலைக்கழக இணையதளத்துக்கு சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க கையேடுகளை பார்க்கலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

The post பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: