சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து: பயணிகள் அவதி

சென்னை: சென்னை சென்ட்ரல்-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று (மே.15) ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அவசரகால பராமரிப்பு பணி காரணமாக பச்சை வழித்தடத்தில் பரங்கிமலை மெட்ரோ – சென்னை விமான நிலையம் இடையேயான மெட்ரோ இரயில் சேவைகள் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பச்சை வழித்தடம் வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாறி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை) மற்றும் பச்சை வழித்தடத்தில் (புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை) மெட்ரோ இரயில் சேவைகள் வார நாள் அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைத்துள்ளனர்.

The post சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: