அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதானி குழுமத்தின் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்றும் வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது என்றும் மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: