எழுத்து சிந்தனையை தூண்ட வேண்டும்: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு

 

காரைக்குடி, ஜன.1: காரைக்குடியில் விஷ்ராம் கல்வி அறிவாலயம் சார்பில் 25 எழுத்தாளர்கள் எழுதிய உறவுகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரி துணை முதல்வர் கோபிநாத் தலைமை வகித்தார். புத்தகத்தை வெளியிட்டு முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேசுகையில், எழுதப்படுவது எல்லாம் எழுத்தல்ல எந்த எழுத்து எழுச்சியை தருகிறதோ, எந்த எழுத்து மகிழ்ச்சியை தருகிறதோ, எந்த எழுத்து சிந்திக்க செய்கிறதோ சிரிக்க செய்கிறதோ, எந்த எழுத்து மரணத்துக்கு பிறகும் வாசிக்கப்படுகிறதோ அது தான் எழுத்து. அழிக்க முடியாதது எழுத்து.

வள்ளுவர், தொல்காப்பியர், சங்ககால புலவர்கள் இந்த மண்ணில் நிலைத்து நிற்க காரணம் எழுத்துத்தான். எனவே எக்காலத்திலும் அழிக்க முடியாதது எழுத்து. காலத்தை நின்று நிலைத்து நிற்க கூடிய எழுத்தாளர்களாக உருவாக வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். வலங்கைமான் நூர்தீன், அழகப்பன், ஆரோக்கியசாமி, ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்எம்எஸ் பள்ளி ஆசிரியர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி சேவியர், திமுக நிர்வாகி காரைசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எழுத்து சிந்தனையை தூண்ட வேண்டும்: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: