காலிப்பணியிடம் நிரப்பக்கோரி கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூன் 26: காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்மை துணை செவிலியர் பயிற்சி நிறைவு செய்தவர்களை பணியமர்த்த வேண்டும். களப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப் பிக்க, சமுதாய சுகாதார செவிலியருக்கு கணினி வழங்க வேண்டும்.

குடும்ப விவரங்களை பதிவேட்டில் கணக்கெடுத்து பதிவு செய்ய, கால அவகாசம் வழங்காமல், நாள்தோறும் கூகுள் ஷீட்டில் தரவுகளை உள்ளீடு செய்யச் சொல் வதை நிறுத்த வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப புதியதாக உருவாக்கப்பட உள்ள துணை சுகாதார நிலையங்களில் MLHP, நர்சுகளை பணியமர்த்தும் கருத்துருவை கைவிட்டு கிராம சுகாதார செவிலியரை பணி நியமனம் செய்ய வேண்டும்.

PICME-3.Oவில் உள்ள குறைபாடுகள், இடர் பாடுகளை சரிசெய்யும் வரை, கிராம பகுதி சமு தாய சுகாதார செவிலியர் களை தரவுகளை உள்ளீடு செய்ய அழுத்தம் கொடுப் பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்தான லட்சுமி தலைமை வகித்தார்.

செயல் தலைவர் கோமதி, மாநில தலைவர் மீனாட்சி, துணைத் தலைவர் அறிவுக்கொடி ஆகியோர் விளக்க உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை கிராம பகுதி சமு தாய சுகாதார செவிலியர் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post காலிப்பணியிடம் நிரப்பக்கோரி கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: