2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ல் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விமரிசையாக நடைபெறும் என அறிவிப்பு

புதுக்கோட்டை: 2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ல் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விமரிசையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். தை மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவினியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதே சமயம் ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தொடங்கும். இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது. தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

The post 2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ல் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விமரிசையாக நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: