கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). இவருடைய மனைவி பர்வீன் பானு (30). இவர் கடந்த செவ்வாய் கிழமை மதியம் ஒரு மணியளவில் தன்னுடைய ஐந்து மாத குழந்தை உமைராவை கூட்டிக்கொண்டு தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் ரஹ்மத்துல்லாஹ் தில்லைநகர் காவல் நிலையத்தில் தனது மனைவியும் தனது 5 மாத குழந்தையும் காணவில்லை என்று புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகிறார்.

The post கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: