கிரிக்கெட் அணியை வாங்கினார் சூர்யா

மும்பை: இந்தியன் ஸ்டிரீட் பிரிமீயர் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 கிரிக்கெட் போட்டி முதல்முறையாக மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை கிரிக்கெட் அரங்கத்துக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த தொடர் அமையும். டென்னிஸ் பந்து கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் (தலா 10 ஓவர்), மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா, இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்‌ஷய்குமார், ஹிரித்திக் ரோஷன் ஆகியோர் முறையே ஐதராபாத், மும்பை, ஸ்ரீநகர், பெங்களூரு அணிகளை சில நாட்களுக்கு முன்பு வாங்கினர். எஞ்சிய சென்னை , கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை அணியை நடிகர் சூரியா வாங்கி உள்ளதாக ஐஎஸ்பிஎல் நிர்வாகம் நேற்று உறுதி செய்தது. கூடவே நடிகர் சூரியாவும் தனது சமூக ஊடக பக்கத்தில் இது குறித்து மகிழ்ச்சியுடன் தகவல் பகிர்ந்துள்ளார்.

The post கிரிக்கெட் அணியை வாங்கினார் சூர்யா appeared first on Dinakaran.

Related Stories: