கல்பாக்கத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி, ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 26ம் தேதி சுனாமி தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று 19ம் ஆண்டு சுனாமி தினம் என்பதால் கல்பாக்கம் சுனாமி பார்க்கில் உள்ள சுனாமி நினைவுத் தூண் அருகே கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து புதுப்பட்டினம் மீனவர் குப்பம் மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு, அமைதி ஊர்வலமாக சென்று அங்குள்ள கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சுனாமி தினத்தையொட்டி துக்கம் அனுசரிக்கும் விதமாக மாமல்லபுரம் மற்றும் சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

The post கல்பாக்கத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: