வைகை அணையில் பாசனத்துக்காக நீர் திறப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: பூர்வீக முதல் கண்மாய் பாசனத்துக்காக இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையிலிருந்து கண்மாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. இன்று முதல் 27- ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் முலம் 6,005 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். 201 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48.13 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 292 கன அடியாக உள்ளது.

தற்போது பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும் குடிநீருக்கு 72 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்பட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை நடவு செய்து அதிக மகசூல் பெற PWD வேண்டுகோள் விடுத்துள்ளது. 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் விடுத்துள்ளனர்.

 

The post வைகை அணையில் பாசனத்துக்காக நீர் திறப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: