குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக, வீடியோ பதிவிட்டவர் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குருவண்டான்தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக கடந்த ஏப். 25ம்தேதி புகார் எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சிபிசிஐடி திருச்சி டிஎஸ்பி (பொ) சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், தண்ணீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்துள்ளதாக முதலில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நபர் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர். ஜூன் 5க்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இந்த 3 பேர் உள்பட மேலும் சிலரையும் இம்மாதத்துக்குள் விசாரிக்க இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

The post குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: