ஸ்ரீகாளஹஸ்தியில் ஜில்லா பரிஷத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி அறிவியல் கண்காட்சி

*எம்எல்ஏ பங்கேற்று பார்வையிட்டார்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தியில் ஜில்லா பரிஷத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் எம்எல்ஏ பங்கேற்று பார்வையிட்டார்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஜில்லா பரிஷத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கல்வி அறிவியல் திட்டங்களைக் காட்சிப்படுத்தினர்.

காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன், ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு மற்றும் திருப்பதி மாவட்ட கல்வி அலுவலர் வி.சேகர். இத்திட்டத்தை துவக்கி வைத்து மாணவ, மாணவியர்கள் செய்த கல்வி திட்டங்களை பார்வையிட்டதோடு திட்டங்களின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ மதுசூதன் பேசியதாவது:

சயின்ஸ்பேர் என்பது குழந்தைகளின் அறிவுசார் சொத்துக்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு நல்ல தளமாகும். மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர பயிற்றுவித்த ஆசிரியர்களை பாராட்டிய அவர்கள், பெற்றோர்கள் மாணவர்களின் இலக்கை நிர்ணயித்து அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். என்றும், மாணவர்களின் ஆர்வத்தை கண்டு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். இதைதொடர்ந்து திருப்பதி மாவட்ட கல்வி அலுவலர் வி.சேகர் கூறியதாவது:

மாணவர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றைத் தழுவி சிறந்து விளங்க வேண்டும். மாணவப் பருவத்திலேயே மூளையை கூர்மைப்படுத்தினால் அற்புதங்களை படைக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீகாளஹஸ்தியில் ஜில்லா பரிஷத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: