காவி மயமான 2வது வந்தே பாரத்

வாரணாசி: டெல்லி-வாரணாசி இடையே 2வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஏற்கனவே டெல்லி-வாரணாசி வந்தே பாரத் ரயில் காவி நிறத்தில் உள்ள நிலையில், 2வது வந்தே பாரத் ரயிலும் காவி நிறத்தில் உள்ளது.

இது குறித்து வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், இந்த புதிய வந்தே பாரத் ரயிலில் வை-பை, ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல், பட்டு துணியினாலான உள் அலங்காரம், ஒவ்வொரு இருக்கைக்கு அடியிலும் சார்ஜிங் பாயிண்ட், ஒவ்வொருவருக்கும் படிப்பதற்கான லைட், வெளியில் உள்ள பருவ நிலை மற்றும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தானாக குளிர்பதத்தை சரி செய்து கொள்ளும் ஏர் கண்டிஷன் வசதி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post காவி மயமான 2வது வந்தே பாரத் appeared first on Dinakaran.

Related Stories: